செய்திகள்

இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் - வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2018-06-25 04:57 IST   |   Update On 2018-06-25 04:57:00 IST
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #WIvsSL #TestSeries
பார்படாஸ்:

வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட், டேவன் ஸ்மித் களமிறங்கினர். இலங்கை அணியினரின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் விரைவில் அவுட்டாகினர்.

பிராத்வைட் 2 ரன்னிலும், ஸ்மித் 2 ரன்னிலும் பாவெல் 4 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து இறங்கிய ஹோப் 11 ரன்னிலும், ரோஸ்டன்சேஸ் 14 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது.

வெஸ்ட் அணி 33.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.



மழை விட்டதும் ஆட்டம் தொடங்கியது. ஷேன் டாவ்ரிச் மற்றும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடி 115 ரன்கள் சேர்த்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களை கடந்தது. ஷேன் டாவ்ரிச் 71 ரன்னிலும், ஜேசன் ஹோல்டர் 74 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 69.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி சார்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டும். கசின் ரஜிதா 3 விக்கெட்டும், சுரங்கா லக்மல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது. #WIvsSL #TestSeries
Tags:    

Similar News