செய்திகள்

GOAT அல்ல, Sheep - மெஸ்சியை கிண்டல் செய்யும் டுவிட்டர்வாசிகள்

Published On 2018-06-22 09:48 GMT   |   Update On 2018-06-22 09:48 GMT
அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி GOAT அல்ல, Sheep என்று டுவிட்டர்வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். #WorldCup2018 #Messi
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அர்ஜென்டினா கோப்பையை வாங்கும் அணகளில் ஒன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அந்த அணியில் மெஸ்சி இடம்பிடித்திருப்பது. இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அர்ஜென்டினா என்றாலே கால்பந்து ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது டியகோ மரடோனா, மெஸ்சி ஆகியோர்தான். இந்த இருவர்களுக்கும் இடையில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் தற்போதைய விவாதம் உள்ளது. இதில் மெஸ்சி சற்றே பின்தங்கியிருக்கிறார். ஏனென்றால் முக்கியமான சர்வதேச தொடரில் அவர் ஜொலித்தது கிடையாது. கடந்த வருடம் பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஜெர்மனியிடம் வீழ்ந்து கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தார். அதனோடு கோபா அமெரிக்கா கோப்பையை இரண்டு முறை சிலியிடம் இழந்தார்.



இதனால் அர்ஜென்டினாவிற்கு சர்வதேச கோப்பையை வாங்கி தந்தது கிடையாது என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த உலகக்கோப்பையில் மெஸ்சி களம் இறங்கினார். இந்த தொடரில் அர்ஜென்டினாவின் ஆட்டத்தை பொறுத்து ஓய்வு முடிவு இருக்கும் என்று அறிவித்தார்.

ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்தற்கு நேர் எதிராக அர்ஜென்டினாவின் விளையாட்டு அமைந்து வருகிறது. ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜென்டினா முதல் போட்டியில் சுவிட்சர்லாந்திற்கு எதிராக 1-1 என டிரா செய்தது. நேற்று நடைபெற்ற குரோசியாவிற்கு எதிராக 0-3 என படுதோல்வியடைந்தது. இந்த இரண்டு போட்டியிலும் மெஸ்சியால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை.



அதேவேளையில் இவருக்கு போட்டியாக திகழும் போர்ச்சுக்கலின் கிறிஸ்டினோ ரொனால்டோ இரண்டு போட்டிகளில் நான்கு கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த தலைமுறையின் GOAT (Greatest Of All Time- எல்லா நேரத்திலும் சிறந்தவர்) யார் என்பதில் இருவருக்கும் இடையில் கடும் போட்டிய நிலவி வருகிறது. இந்நிலையில் மெஸ்சியின் சொதப்பல் ஆட்டத்தால் வெறுப்படைந்த ரசிகர்கள், அவர் GOAT அல்ல, Sheep  என்று டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.


Tags:    

Similar News