செய்திகள்

உலககோப்பை கால்பந்து - அரையிறுதிக்கு நுழையும் நாடுகளை அறிய பன்றி மூலம் ஆருடம்

Published On 2018-06-18 05:57 GMT   |   Update On 2018-06-18 05:57 GMT
உலக கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்குள் நுழையும் நான்கு நாடுகள் குறித்து பன்றி மூலம் ஆருடம் பார்க்கப்பட்டதில் எந்தெந்த அணி என்பது தெரியவந்துள்ளது. #WorldCup #WorldCup2018 #FifaWorldCup2018
லண்டன்:

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அரை இறுதிபோட்டியில் நுழையும் 4 நாடுகளை தெரிந்துகொள்ள தற்போது பல்வேறு ஆருடங்கள் மூலம் கணிப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் இங்கிலாந்தில் டெர்பிஷையர் பகுதியில் ஒரு பன்றி மூலம் ஆருடம் பார்க்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஹெஜ்கிராமத்தை சேர்ந்த ஸ்டீவன்ஸ் என்பவர் தனது பண்ணையில் 100 பன்றிகளை வளர்க்கிறார்.

அதில், மார்கஸ் என்ற ஒரு சிறிய பன்றி மூலம் ஆருடம் நிகழ்த்தப்பட்டது. உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் கொடிகள் குத்தப்பட்ட ஆப்பிள்கள் இந்த பன்றிக்கு உணவாக வைக்கப்பட்டது.



ஆனால் அந்த பன்றி பெல்ஜியம், அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் உருகுவே ஆகிய 4 நாடுகளின் கொடிகள் குத்திய ஆப்பிள்களை மட்டும் சாப்பிடவில்லை. மற்ற அனைத்தையும் சாப்பிட்டு விட்டது.

எனவே அரையிறுதி போட்டியில் பெல்ஜியம், அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் உருகுவே ஆகிய 4 நாடுகள் இடம்பெறும் என நம்பபடுகிறது.

இப்பன்றியின் கணிப்பு சரியாக இருக்கும் என அதன் உரிமையாளர் ஸ்டீவன்ஸ் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் தேர்தலையும் இப்பன்றி சரியாக கணித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2010 உலககோப்பை கால்பந்து போட்டியின் போது பால் என்ற ஆக்டோபஸ் வெற்றியாளரை சரியாக கணித்தது குறிப்பிடத்தக்கது. #WorldCup #WorldCup2018 #FifaWorldCup2018
Tags:    

Similar News