செய்திகள்

குயின் கிளப் டென்னிஸ் தொடரில் இருந்து நடால் விலகல்

Published On 2018-06-14 19:42 IST   |   Update On 2018-06-14 19:42:00 IST
செம்மண் கோர்ட்டில் அதிக போட்டிகளில் விளையாடியதால் விம்பிள்டன் பயிற்சி தொடரான குயின் கிளப் தொடரில் இருந்து நடால் விலகியுள்ளார். #Wimbledon #Nadal
டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ரபெல் நடால் பாரிஸில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபனை 11-வது முறையாக கைப்பற்றி சாதனைப் படைத்தார். விரைவில் அடுத்த கிராண்ட் ஸ்லாம் தொடரான விம்பிள்டன் தொடர் நடக்க இருக்கிறது.

இதற்கு முன்னோட்டமாக கருதப்படும் ஆண்களுக்கான குயின் கிளப் டென்னிஸ் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இருந்து நம்பர் ஒன் வீரரான நடால் விலகியுள்ளார். தொடர்ச்சியாக செம்மண் கோர்ட்டில் விளையாடியதன் காரணமாக ஓய்வு தேவைப்படுவதால் விலகியதாக நடால் கூறியுள்ளார்.



மேலும், நடால் இந்த தொடரில் இருந்து விலகியது குறித்து கூறுகையில் ‘‘குயின் கிளப் தொடர் மிகவும் சிறப்பான தொடர். 2008-ம் ஆண்டு நான் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்வான் நினைவாகும். இந்த வருடம் விளையாட விரும்பினேன். ஆனால் செம்மண் கோர்ட்டில் நீண்ட சீசன் விளையாடியுள்ளேன்’’ என்றார்.
Tags:    

Similar News