செய்திகள்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்- நடால் ஆட்டம் மழையால் பாதிப்பு

Published On 2018-05-29 06:38 GMT   |   Update On 2018-05-29 06:38 GMT
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை வென்றவருமான ரபெல் நடால் மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. #FrenchOpen #nadal
பாரீஸ்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப்போட்டியின் 2-வது நாள் ஆட்டங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

உலகின் முதல் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை வென்றவருமான ரபெல் நடால் மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அவர் தொடக்க சுற்றில் இத்தாலியை சேர்ந்த சிமோன் போலிலியை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் நடால் 6-4, 6-3, 0-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.



இதேபோல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த பல ஆட்டங்களும் பாதிக்கப்பட்டது. இதே போல பெண்கள் பிரிவில் ‌ஷரபோவா மோதிய ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டங்கள் இன்று நடக்கிறது. #FrenchOpen #nadal
Tags:    

Similar News