செய்திகள்

தொடர்ச்சியாக மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி கர்ண் சர்மா சாதனை

Published On 2018-05-28 09:38 GMT   |   Update On 2018-05-28 09:38 GMT
தொடர்ச்சியாக மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய அணியில் இடம்பிடித்த ஒரே வீரர் என்ற பெருமையை கரண் சர்மா பெற்றுள்ளார். #IPL2018 #CSK
ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் செனனை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங்கிற்குப் பதில் கரண் சர்மா இடம்பிடித்திருந்தார். இவர் 3 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து முக்கிய வீரரான கேன் வில்லியம்சனை வீழ்த்தினார்.

சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியில் இடம்பிடித்ததன் மூலம் தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கர்ண் ஷர்மா பெற்றுள்ளார்.



2016-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்திய சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கரண் சர்மா இடம்பிடித்திருந்தார். கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் கரண் சர்மா இடம்பிடித்திருந்தார். இதன்மூலம் ஐபிஎல் கோப்பையை கர்ண் சர்மா தொடர்ச்சியாக மூன்று முறை ருசித்துள்ளார்.
Tags:    

Similar News