செய்திகள்

உலக லெவன் கிரிக்கெட் அணியில் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா

Published On 2018-05-04 09:07 IST   |   Update On 2018-05-04 09:07:00 IST
லண்டனில் நடக்கவுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணிக்கெதிரான ஐ.சி.சி. உலக லெவன் அணியில் இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளனர்.#ICCWorldXI #DineshKarthik #HardikPandya
20 ஓவர் உலக சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ்-ஐ.சி.சி. உலக லெவன் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான உலக லெவன் அணியில் இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உலக லெவன் அணியின் கேப்டனாக இங்கிலாந்தை சேர்ந்த இயான் மோர்கன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக், அப்ரிடி, இலங்கையை சேர்ந்த திசரா பெரேரா, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்
. #ICCWorldXI #DineshKarthik #HardikPandya

Similar News