செய்திகள்

உலக கோப்பை தகுதிச்சுற்று - ஜிம்பாப்வேயை வீழ்த்தியது யுனைடெட் அரபு எமிரேட்ஸ்

Published On 2018-03-22 23:52 GMT   |   Update On 2018-03-22 23:52 GMT
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான சூப்பர் சிக்ஸ் தகுதிச்சுற்றில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியிடம் ஜிம்பாப்வே அணி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #ICCWCQ #Zimbabwe #Unitedarabemirates
உலக கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஜிம்பாப்வே - யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிகள் ஜிம்பாப்வேயில் நேற்று மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

அரபு எமிரேட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக  ரோஹன் முஸ்தபாவும், அஷ்பாக் அகமதுவும் களமிறங்கினர். அகமது 10 ரன்னில் அவுட்டாகினார். அவரை தொடர்ந்து இறங்கிய குலாம் ஷபிர் நிதானமாக விளையாடி 40 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ரமீஸ் ஷசாத் சிறப்பாக விளையாடி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நிற்கவில்லை.



ஜிம்பாப்வே அணி 47.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. அரபு எமிரேஸ் அணி சார்பில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டும், சதாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஜிம்பாப்வே அணி 40 ஓவரில் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயம் செய்யப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக சாலமன் மிர், ஹாமில்டன் மசகாசாவும் களமிறங்கினர். அரபு எமிரேட்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஜிம்பாப்வே அணியின் சீன் வில்லியம்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 80 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், நிர்ணயம் செய்யப்பட்ட 40 ஓவரில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் அரபு எமிரேட்ஸ் அணி வெற்றி பெற்றது. அரபு எமிரேஸ் அணி சார்பில் மொகமது நவீத் 3 விக்கெட்டும், ரோஹன் முஸ்தபா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News