செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் மீது முழு நம்பிக்கை இருந்தது: குருணால் பாண்டியா

Published On 2018-01-29 13:48 GMT   |   Update On 2018-01-29 13:48 GMT
மும்பை இந்தியன்ஸ் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி என்னை தக்கவைத்துக் கொள்ளும் என்ற முழு நம்பிக்கை இருந்ததாக குருணால் பாண்டியா தெரிவித்துள்ளார். #iplacution #MI
ஐபிஎல் வீரர்கள் எலம் நேற்றும், நேற்றுமுன்தினமம் (ஜனவரி 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதி) நடைபெற்றது. இதில் மும்பை அணி குருணால் பாண்டியாவை 8.8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஏற்கனவே ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோரை தக்க வைத்ததால் குருணால் பாண்டியாவை தக்க வைக்க முடியவில்லை. ஆனால் ஏலத்தின் மூலம் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தது.

ஏலத்தில் குருணால் பாண்டியாவின் அடிப்படை விலை 40 லட்சம் ரூபாய்தான். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் போட்டியிட்டதால் விலை கிடுகிடு என உயர்ந்தது. 8.8 கோடி ரூபாய்க்கு கேட்ட நிலையில் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி மும்பை அணி என்னை தக்க வைத்துக் கொள்ளும் என்ற முழு நம்பிக்கை இருந்ததாக குருணால் பாண்டியா கூறியுள்ளார்.



இதுகுறித்து குருணால் பாண்டியா கூறுகையில் ‘‘நான் மீண்டும் மும்பை அணிக்குத்தான் செல்வேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருந்தது. மும்பை அணி எனக்காக ஆர்டிஎம் கார்டை பயன்படுத்துவார்கள் என்று நம்பினேன்.

கடந்த இரண்டு சீசனில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அதிக தொகைக்கு ஏலம் போவோன் என்பது எனக்குத் தெரியும். ஆனால், மும்பை அணியில் மீண்டும் இடம்பெற இருப்பதால் அதிக மகிழ்ச்சியுடன் உள்ளேன். ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து விளையாடுவது விஷேசமானது’’ என்றார்.  #iplacution #MI
Tags:    

Similar News