செய்திகள்

தென் மண்டல நீச்சல்: கர்நாடகா அணி சாம்பியன்

Published On 2018-01-29 12:51 IST   |   Update On 2018-01-29 12:51:00 IST
வேளச்சேரியில் நடந்த தென் மண்டல நீச்சல் போட்டியில் கர்நாடகா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை:

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 30-வது தென் மண்டல நீச்சல் போட்டி வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது. மொத்தம் 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 2 புதிய தேசிய சாதனைகள் படைக்கப்பட்டன. தனி நபர் பிரிவில் மொத்தம் உள்ள 8 பிரிவில் 7 பிரிவுகளில் கர்நாடகாவும், ஒரு பிரிவில் கேரளாவும் சாம்பியன் பட்டங்களை வென்றன.

நிஷாந்த்குமார், ஜனனி ராஜேஷ் (குரூப்1), மேத்யூர் கோஷி, குஷி தினேஷ், சுவனா பாஸ்கர் (குரூப் 2), உத்கார்ஷ், படேல், நினா வெங்கடேஷ் (குரூப் 3), கிரிஷ் சுகுமார், ரிதிமா விரேந்தர் (குரூப் 4) ஆகியோர் தனி நபர் பட்டங்களை கைப்பற்றினர்.

சிறுவர்கள் பிரிவில் 626 புள்ளிகள், சிறுமியர் பிரிவில் 710 புள்ளிகள் என கர்நாடகா அணி 1,336 புள்ளிகளை கைப்பற்றி ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

தமிழ்நாடு நீச்சல் சங்க தலைவர் டாக்டர் சடைய வேல் கைலாசம் பரிசுகளை வழங்கினார். செயலாளர் டி.சந்திரசேகர், துணை தலை வர்கள் கே.கே.முகுந்தன், முனியாண்டி, பொருளாளர் முரளிதரன் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.

Similar News