சினிமா செய்திகள்

10 நாளில் இத்தனை கோடியா?.. பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் தனுஷின் பாலிவுட் படம்

Published On 2025-12-09 01:21 IST   |   Update On 2025-12-09 01:21:00 IST
  • தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.
  • படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.118.76 கோடி வசூல் செய்திருந்தது.

பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.

இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).

இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷின் நடிப்பிற்கு ரசிகர்களிடம் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.118.76 கோடி வசூல் செய்திருந்தது. இந்நிலையில், 'தேரே இஷக் மெய்ன்' படம் 10 நாட்களில் ரூ.141.86 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.   

Tags:    

Similar News