சினிமா செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினியின் 'பாட்ஷா' உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் தேர்வு

Published On 2025-12-09 04:38 IST   |   Update On 2025-12-09 04:38:00 IST
51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன. அவற்றில் 13 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும்.

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.

அந்த வகையில் 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 11 முதல் 18 வரை சென்னை பிவிஆர் சினிமாஸ் -இல் நடைபெற உள்ளது.

51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன. அவற்றில் 13 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும்.

உலகளவில் உள்ள திரைப்பட இயக்குனர்கள், வெளிநாட்டு தூதர்கள், உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

உலகின் மற்ற பிரபலமான திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்கள் இந்த ஆண்டு திரையிடப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் இதில் திரையிடப்பட்ட 12 தமிழ் படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், பறந்து போ, 3 பிஎச்கே, அலங்கு, வேம்பு, பிடிமண், காதல் என்பது பொது உடைமை, மாயக்கூத்து, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், மெட்ராஸ் மேட்னி, மருதம், ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இவை தவிர்த்து சிறப்பு திரையிடலுக்கு பாட்ஷா படம் தேர்வாகி உள்ளது.

ரஜினியின் 50 ஆண்டுகால சினிமா பங்களிப்பை போற்றும் விதமாக மற்றும் பாட்ஷா படத்தின் 30 ஆண்டு கால பயணைத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் 60 ஆண்டு கால பயணத்தையும் கொண்டாடும் விதமாக இப்படம் திரையிடப்படுகிறது. 

Tags:    

Similar News