அஜித் நல்ல குடும்பஸ்தர்.. அதுபோல விஜய்.. ஓபனாக சொன்ன தமன்னா
நடிகை தமன்னா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் நடிகர் விஜய் குறித்து அவரிடம் கேள்வி எழுபப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், மிகவும் எளிமையான, மென்மையான மனிதர். நடனம் ஆடுவதில் அவரும், ஜூனியர் என்.டி.ஆரும் தான் சிறந்தவர்கள்" என்று கூறினார்.
அதேபோல் அஜித் குறித்த கேள்வுக்கு பதில் அளித்த அவர், "வீரம் படப்பிடிப்பின்போது கேரவனில் வைத்து எனக்கு இட்லி செய்து கொடுத்தார். அவருக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் நல்ல மனிதர், மென்மையானவர். நல்ல குடும்பஸ்தர்" என்று தெரிவித்தார்.
மேலும் நிகழ்வில் தனது முதல் திரைப்படமான 'கல்லூரி' படத்தை நினைவு கூர்ந்த அவர் மாணவ மாணவிகள் கல்லூரி வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.
அஜித்தின் 54 வது படமான வீரம் படத்திலும், விஜய்யின் 50 வது படமான சுறா படத்திலும் தமன்னா கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.