சினிமா செய்திகள்
தேதி இதுதான்.. "காந்தா" ஓடிடி ரிலீஸ் - எதில் பார்க்கலாம்?
- தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
- சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
துல்கர் சல்மான் நடிப்பில் டந்த 14-ந் தேதி வெளியான படம் 'காந்தா'
இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி, ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் காந்தா திரைப்படம் வருகிற 12 ஆம்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.