null
இது நீதியா?.. திலீப் விடுதலையால் நடிகை பார்வதி கொந்தளிப்பு
- திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
- நாம் மிகவும் கொடூரமான மற்றும் கவனமான வடிவமைக்கப்பட்ட ஒரு திரைக்கதையின் முடிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் நேற்று எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.
இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள். அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும். இந்த வழக்கில் திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது. 6 பேருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 12-ந்தேதி அறிக்கப்படுகிறது.
இந்நிலையில் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே திலீப் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை பார்வதி திருவோத்து இன்ஸ்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "இது நீதியா?.. என்றும் அவருடன் (பாதிக்கப்பட்ட நடிகை). அவர் தனக்காக மட்டுமல்ல, கேரளாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்காகவும் போராடினார். அவரது போராட்டம் கேரளாவின் சமூகத்தில் பெண்கள் நிற்கும், போராடும், பேசும், வன்முறைக்கு எதிர்வினையாற்றும் விதத்தை மாற்றியது.
நீதி என்றால் என்ன? இப்போது நாம் மிகவும் கொடூரமான மற்றும் கவனமான வடிவமைக்கப்பட்ட ஒரு திரைக்கதையின் முடிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.