செய்திகள்

டி20-யில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி சாதனை

Published On 2017-11-24 13:37 GMT   |   Update On 2017-11-24 13:37 GMT
டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து லாகூர் ஒயிட்ஸ் அணியின் கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி உலக சாதனைப் படைத்துள்ளது.
பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ‘நேஷனல் டி20 கோப்பை’ தொடரில் லாகூர் ஒயிட்ஸ் - இஸ்லாமாபாத் அணிகள் ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

லாகூர் ஒயிட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்கள் நிலைத்து நின்று விளையாடிய இருவரும் 209 ரன்கள் குவித்தனர். இதில் கம்ரான் அக்மல் 71 பந்துகளை சந்தித்து 150 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டரி, 12 சிக்சர்கள் அடங்கும். சல்மான் பட் 49 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார்.


71 பந்தில் 150 ரன்கள் குவித்த கம்ரான் அக்மல்

விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து கவுண்டி அணியான கென்ட் வீரர்கள் ஜோ டேன்லி - டேனியல் பெல் ஜோடி நட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் 207 ரன்கள் குவித்திருந்தது. தற்போது இதை கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி முறியடித்துள்ளது.
Tags:    

Similar News