செய்திகள்

இலங்கையில் அடுத்த ஆண்டு முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா, வங்காள தேசம் பங்கேற்பு

Published On 2017-11-17 15:33 GMT   |   Update On 2017-11-17 15:33 GMT
இலங்கையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, வங்காள தேசம் பங்கேற்கிறது.
இலங்கை சுதந்திரம் அடைந்து 70-வது ஆண்டு ஆவதை கொண்டாடும் வகையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த அந்நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அந்த தொடருக்கு ‘நிதாஹாஸ் டிராபி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையுடன் இந்தியா, வங்காள தேசம் அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் 2018 மார்ச் மாதம் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

இந்த தொடரில் கலந்து கொள்வது குறித்து பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி கூறுகையில் ‘‘இலங்கையின் 70-வது வருட கொண்டாட்டத்தில் சிறப்புரிமை பெற்றவர்களில் நாங்கள் ஒருவராக இருக்கிறோம். இலங்கைக்கு பிசிசிஐ விட சிறந்த நண்பர் வேறு யாரும் இருக்க முடியாது’’ என்றார்.
Tags:    

Similar News