செய்திகள்

மைக்கேல் ஷூமாக்கர் உடல்நிலையில் மருத்துவ அதிசயம் நிகழும்: குடும்பத்தினர் நம்பிக்கை

Published On 2017-11-10 10:57 GMT   |   Update On 2017-11-10 10:57 GMT
கோமாவில் உள்ள பார்முலா 1 கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் உடல்நிலையில் மருத்துவ அதிசயம் நிகழ்ந்து, விரைவில் குணமடைவார் என அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பெர்லின்:

ஜெர்மனியின் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஷூமாக்கர் பார்முலா 1 கார் பந்தயத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார். 2012-ல் கார் பந்தயத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சாகச விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்த ஷூமாக்கர், பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது பாறையில் மோதி விபத்துக்குள்ளானார்.



கடந்த 2013 ம் ஆண்டு பனிச் சறுக்கின்போது காயம் ஏற்பட்டதால் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் 4 ஆண்டுகளாக கோமா நிலையில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க 15 ஃபிசியன்ஸ் மற்றும் நர்ஸ் கொண்ட குழு உள்ளது. அவர்கள் அவரின் உடல்நிலையை தொடர்ச்சியாக கவனித்து வருகின்றனர்.


இந்நிலையில், ஷூமாக்கர் நிலைமை தற்சமயம் முன்னேறி வருவதாக அவர் நண்பர் தெரிவித்தார். அவரின் உடல்நலம் விரைவில் குணமடையும் என குடும்பத்தினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் ஏதாவது அதிசயம் நிகழும் என அவர் கூறினார்.

ஷுமாக்கரின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ செய்தி இதுவரை வெளியிடப்படாத நிலையில் அவரது நண்பர் கூறியது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷூமாக்கர் 7 முறை பார்முலா 1 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News