செய்திகள்

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர், டிமித்ரோ வெற்றி

Published On 2017-08-31 01:30 IST   |   Update On 2017-08-31 01:30:00 IST
அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல்சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், டிமித்ரோ ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நியூயார்க்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் 22-ம் தேதி தொடங்கியது. தகுதிச்சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் முதல் சுற்று ஆட்டங்கள் கடந்த 28-ம் தேதி தொடங்கியது.

இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் மூன்றாம்நிலை வீரரான ரோஜர் பெடரர், அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு வீரர்களும் வெற்றி பெரும் முனைப்புடன் மாறி மாறி புள்ளிகள் பெற்றனர். முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் டியாபோ கைப்பற்றினார்.



அடுத்த இரண்டு சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடிய பெடரர், 6-2, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். நான்காவது சுற்றை டியாபோ, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் அடுத்த சுற்றுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி சுற்றை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் பெடரர் கைப்பற்றினார். இதன்மூலம், ஐந்து சுற்றுகளில் மூன்று சுற்றுகளில் வென்ற பெடரர் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஏழாம்நிலை வீரரான டிமித்ரோவும், செக் குடியரசின் வக்லவ் சஃப்ரநிக்கும் மோதினர். இப்போட்டியில், 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் டிமித்ரோ வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிப்பெற்றார்.

Similar News