செய்திகள்

போல் நிலை: மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன்

Published On 2017-08-26 21:12 IST   |   Update On 2017-08-26 21:12:00 IST
பெல்ஜியம் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்திற்கான தகுதிச் சுற்று முடிவில் லெவிஸ் ஹாமில்டன் போல் நிலையை அடைந்து ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஜெர்மனியின் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஷூமாக்கர் பார்முலா 1 கார்பந்தயத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார். பனிச் சறுக்கின்போது காயம் ஏற்பட்டதால் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உண்மையான உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.



இவர் பந்தயத்தில் கலந்து கொண்ட காலத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதில் ஒன்று போல் நிலையை அடைதல். ஷூமாக்கர் தனது வாழ்நாளில் 68 முறை போல் நிலையை அடைந்துள்ளார். இதுவரை இதுதான் சாதனையாக இருந்து வருகிறது.

நாளை பெல்ஜியம் கிராண்ட் பிரிக்ஸ் நடைபெறுகிறது. இதற்கான போல் நிலையை பெறுவதற்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் லெவிஸ் ஹாமில்டன் போல் நிலையை அடைந்தார். இது ஹாமில்டனுக்கு பார்முலா 1 கார் பந்தயத்தில் 68-வது போல் நிலை ஆகும். இதன்மூலம் ஷூமாக்கரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.



ஷூமாக்கர் 7 முறை பார்முலா 1 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News