செய்திகள்
ஜேம்ஸ் ரோட்ரிக்சை 2 வருடம் கடனாக பெற்றது பேயர்ன் முனிச்
ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த கொலம்பிய வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸை 2 வருடத்திற்கு கடனாக பெற்றுள்ளது பேயர்ன் முனிச்.
ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் ரியல் மாட்ரிட். இந்த அணியில் கொலம்பியாவின் முன்னணி ஸ்ட்ரைக்கரான ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் இடம்பிடித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ, பென்சிமா, கராத் பேலே ஆகியோர் இருப்பதால் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸிற்கு களமிறங்குவதற்கு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான போட்டிகளில் மாற்று வீரர்களாக களமிறங்கும் வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது.
வாய்ப்பு கிடைக்காததால் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் வேறு அணிக்கு செல்ல இருப்பதாக சமீப காலமாக செய்தி வந்து கொண்டிருந்தது. அவரை வாங்குவதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி முயற்சி செய்து வந்தது.
இந்நிலையில் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸை ஜெர்மனியின் பண்டஸ்லிகா அணியான பேயர்ன் முனிச் இரண்டு வருடத்திற்கு கடனாக பெற்றுள்ளது. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.