செய்திகள்

காயம் காரணமாக விம்பிள்டன் தகுதிச் சுற்றில் இருந்து ஷரபோவா விலகல்

Published On 2017-06-11 18:43 IST   |   Update On 2017-06-11 18:43:00 IST
தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விம்பிள்டன் தகுதிச் சுற்று தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார்.
ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. அவருக்கு ஊக்கமருந்து பயன்படுத்திய விவாரத்தில் சுமார் 15 மாதம் விளையாட தடைவிதிக்கப்பட்டது. பின்னர் டென்னிஸ் அரங்கில் கால் எடுத்து வைத்தார்.

பிரெஞ்ச் ஓபனுக்கு முன்பாக ரோமில் நடைபெற்ற டென்னிஸ் தொடரின்போது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் பர்மிங்காமில் நடைபெறும் தொடரிலும், கிராண்ட்ஸ்லாம் தொடரின் முக்கியத்துவம் வாய்ந்த விம்பிள்டன் தொடருக்கான தகுதிச் சுற்றிலுமிருந்தும் விலகியுள்ளார்.

காயம் முழுவதுமாக குணமடைந்த பின்னர் ஜூலை 31-ந்தேதிக்கு பின்னர் டென்னிஸ் விளையாட திட்டமிட்டுள்ளார். ஜூலை 3-ந்தேதி முதல் 16-ந்தேதிவரை விம்பிள்டன் தொடர் நடக்கிறது.

இதனால் இந்த வருடத்தின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபனில் விளையாடும் நோக்கத்தில் உள்ளார்.

Similar News