டி20 உலக கோப்பை: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு
- அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பால் ஸ்டிர்லிங் தான் 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த அயர்லாந்து வீரர்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறு கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டிக்கான இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப் பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, நமீபியா, ஓமன், நேபாளம் ஆகிய அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தான் 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த அயர்லாந்து வீரர் ஆவார். லார்கன் டக்கட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த உலக கோப்பையில் இடம்பெற்ற வீரர்களில் 12 பேர் இந்த முறையும் தேர்வாகியுள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பையில் இடம்பெற்றுள்ள அயர்லாந்து அணி வருமாறு:-
பால் ஸ்டீர்லிங் (கேப்டன்) மார்க் ஆதிர், பென்கால்ட்ஸ், கேம்பெர், டெலனி, ஜார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப் ரேஸ், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கர்த்தி, ஹாரி டக்கர், லார்கன் டக்கெட், பென் ஒயிட், கிரேக் யங்.