சினிமா செய்திகள்

ஜனநாயகன் மீது தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி - மாரி செல்வராஜ்

Published On 2026-01-10 13:40 IST   |   Update On 2026-01-10 13:40:00 IST
  • 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்று வழங்கப்படாததால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • தணிக்கைத்துறையை விமர்சித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜன நாயகன் தணிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய தணிக்கைத்துறையை விமர்சித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News