செய்திகள்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முர்ரே-வாவ்ரிங்கா அரைஇறுதியில் மோதல்

Published On 2017-06-08 06:36 GMT   |   Update On 2017-06-08 06:36 GMT
பிரெஞ்சு ஓபன் டென்னிசின் அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரேவும் மூன்றாம் நிலை வீரரான வாவ்ரிங்காவும் மோதுகிறார்கள்.
பாரீஸ்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) கால்இறுதியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரே, ரபெல் நடால், வாவ்ரிங்கா ஆகியோர் கால்இறுதியில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். ஒரு அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து)- மூன்றாம் நிலை வீரரான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள்.

மற்றொரு அரை இறுதியில் 9 முறை சாம்பியனும், 4-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்)- டொமினிக் மோதுகிறார்கள்.

பெண்கள் அரை இறுதி போட்டிகளில் ஹெலப் (ருமே னியா)- பிளிஸ் கோவா (செக்கு டியரசு) ஒஸ்டா பென்கோ (லாத் வியா)- பாசின்ஸசி (சுவிட் சர்லாந்து) மோதுகிறார்கள்.
Tags:    

Similar News