செய்திகள்

இங்கிலாந்து கால்பந்து அணியில் ரூனிக்கு இடமில்லை

Published On 2017-05-26 08:49 IST   |   Update On 2017-05-26 08:49:00 IST
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
லண்டன் :

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணி அடுத்த மாதம் ஸ்காட்லாந்துடன் மோத இருக்கிறது. மேலும் பிரான்சுடன் நட்புறவு ஆட்டம் ஒன்றிலும் விளையாட உள்ளது.

இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நட்சத்திர வீரர் வெய்ன் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. முந்தைய ஆட்டத்தின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் சேர்க்கப்படவில்லை. ஆனால் இப்போது முழு உடல்தகுதியை எட்டிய போதிலும் அணிக்கு அழைக்கப்படாதது ஆச்சரியம் அளிக்கிறது.

31 வயதான ரூனி தான் இங்கிலாந்து அணிக்காக அதிக கோல்கள் (53 கோல்) அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News