செய்திகள்
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கைப்பற்றினால் மொட்டை அடித்துக் கொள்வோம்: சமி சொல்கிறார்
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கைப்பற்றினால் உரிமையாளர் உள்பட அனைத்து வீரர்கள் மொட்டையடித்துக் கொள்வோம் என்று ஷமி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று பாகிஸ்தான் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் சமி தலைமையிலான பெஷாவர் ஷல்மி அணியும், பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தலைமையிலான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
டேரன் சமி எப்போதும் நகைச்சுவையாக பேசக்கூடியர். சமியுடன், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் முன்னணி வீரர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது உங்களது மொட்டைத்தலை மற்றும் சேவிங் செய்த முகம் பிடிக்கும் எனக்கூறியுள்ளார்.
அப்போது சமி பதிலளிக்கையில் ‘‘பெஷாவர் ஷல்மி அணி பி.எஸ்.எல். தொடரை கைப்பற்றினால் ஒட்டுமொத்த அணி வீரர்களும் மொட்டையடித்துக் கொள்வோம். எங்களுடன் அணியின் உரிமையாளரும் ஆன ஜாவெத் அப்ரிடியும் மொட்டையடித்துக் கொள்வார்’’ என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் வெளிநாட்டு வீரர்கள் வந்து விளையாட இருப்பதால் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் கடாபி மைதானம் அருகில் உள்ள தேசிய ஹாக்கி மைதானத்தில் 25 தற்காலி படுக்கை கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் ஹோட்டலில் இருந்து மைதானம் வருவதற்காக குண்டு துளைக்காத பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.