செய்திகள்

மெதுவாக பந்து வீசியதால் பாக். கேப்டனுக்கு 100 சதவீதம் அபராதம்

Published On 2016-11-29 13:48 GMT   |   Update On 2016-11-29 13:48 GMT
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் மெதுவாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலிக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஹாமில்டனில் நடைபெற்றது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 271 ரன்களும், பாகிஸ்தான் 216 ரன்களும் எடுத்தது,

55 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 369 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி 230 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 138 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் 2-வது இன்னிங்சில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டனுக்கு இந்த போட்டியின் சம்பள பணம் அனைத்தையும் அபராதமாக ஐ.சி.சி. விதித்தது. அத்துடன் மற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதே பிரச்சினையில் முதல் டெஸ்டில் சிக்கியதால் மிஸ்பா உல் ஹக் ஒரு போட்டியில் தடை பெற்று இந்த டெஸ்டில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News