செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து வெற்றி

Published On 2016-11-20 11:29 IST   |   Update On 2016-11-20 11:29:00 IST
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 133 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 200 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 67 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து இருந்தது.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடியது. அந்த அணி 78.4 ஓவர்களில் 171 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 105 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் தரப்பில் சோகைல்கான் அதிகபட்சமாக 40 ரன் எடுத்தார். வாக்னர், போல்ட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

105 ரன் எடுத்ததால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர் வாதம் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டான ராவல்- வில்லியம்சன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது.

நியூசிலாந்து அணி 31.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 66 ரன்னும், ராவல் 36 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் 2 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 25-ந்தேதி ஹோமில்டனில் தொடங்குகிறது.

Similar News