செய்திகள்

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பிரேசிலுக்கு முதல் தங்கம் வென்று கொடுத்தார், ராப்சன்

Published On 2016-08-18 03:21 IST   |   Update On 2016-08-18 03:21:00 IST
ரியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பிரேசில் வீரர் ராப்சன் கான்சிகாவ் தங்கப் பதக்கம் வென்றார்.
ரியோ டி ஜெனீரோ:

ரியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் ஆண்களுக்கான லைட் வெயிட் (60 கிலோ) பிரிவில் இறுதிப்போட்டியில் பிரேசில் வீரர் ராப்சன் கான்சிகாவ், பிரான்ஸ் வீரர் சோபியன் ஒமிஹாவை சந்தித்தார்.

இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக செயல்பட்ட 27 வயதான ராப்சன் 3-0 என்ற கணக்கில் சோபியன் ஒமிஹாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இந்த ஒலிம்பிக் போட்டியில் பிரேசிலுக்கு கிடைத்த 3-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

நவீன ஒலிம்பிக் வரலாற்றில் குத்துச்சண்டை போட்டியில் பிரேசில் பெற்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு குத்துச்சண்டையில் பிரேசில் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கம் வென்று இருந்தது.

Similar News