செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: வினேஷ் போகத்தைத் தொடர்ந்து சாக்சி மாலிக்கும் காலிறுதியில் தோல்வி

Published On 2016-08-17 22:06 IST   |   Update On 2016-08-17 22:06:00 IST
ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத் மற்றும் சாக்சி மாலிக் இருவரும் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினர்.
ரியோ ஒலிம்பிக் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், இன்று பல்வேறு பிரிவுகளில் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற்றன. பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத், சாக்சி மாலிக் இருவரும் தங்களது எடைப்பிரிவு போட்டிகளில் காலிறுதிக்கு தகுதிபெற்றனர். காலிறுதியில் வினேஷ் போகத்துக்கு காயம் ஏற்பட்டதால் பாதியில் விலகியதால் தோல்வியடைந்தார்.

58 கிலோ எடைப்பிரிவினருக்கான காலிறுதியில் சாக்சி மாலிக், ரஷ்யாவின் வேலரியா கோப்லோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் ரஷ்ய வீராங்கனை 9-2 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டியில் சாக்சி தோல்வி அடைந்தபோதிலும், வேலரியா பைனலுக்குச் சென்றால், வெண்கலப் பதக்கத்துக்கான ரெப்பேஜ் சுற்றில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

இதே பிரிவில் மற்ற காலிறுதி ஆட்டங்களில் ஜப்பான் வீராங்கனை கயோரி இக்கோ, அசர்பைஜானின் யூலியா, கிர்கிஸ்தானின் ஐசுலு ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Similar News