செய்திகள்

110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்காவுக்கு முதல் தங்கம்

Published On 2016-08-17 17:38 IST   |   Update On 2016-08-17 17:38:00 IST
ஒலிம்பிக்கில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக்கில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடைபெற்றது. இதில், 22 வயதான ஜமைக்கா வீரர் ஒமர் மெசிலாட் பந்தய தூரத்தை 13.05 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்காவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது.

ஸ்பெயின் வீரர் ஓர்டேகா 13.17 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கமும், பிரான்சை சேர்ந்த டிமிட்ரி பாஸ்கோவ் 13.24 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

பிரிட்டனின் முன்னணி வீரர்களான ஆண்ட்ரூ போஸி மற்றும் லாரன்ஸ் கிளார்க் ஆகிய இருவரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News