செய்திகள்

200 மீட்டர் ஓட்டம்: அரைஇறுதிக்கு உசேன்போல்ட் முன்னேற்றம்

Published On 2016-08-17 09:52 IST   |   Update On 2016-08-17 09:52:00 IST
ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்று போட்டியில் உசேன் போல்ட் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
ரியோ டி ஜெனீரோ :

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்று நேற்று நடந்தது. இதில் பதற்றமின்றி சர்வ சாதாரணமாக ஓடிய நடப்பு சாம்பியன் உசேன் போல்ட் (ஜமைக்கா) 20.28 வினாடிகளில் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். அவருக்கு சவால் அளிக்கக்கூடிய அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேத்லின், கனடாவின் டி கிராசி ஆகியோரும் அரைஇறுதியை எட்டினார்.

அரைஇறுதி சுற்று இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கும், இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கும் நடக்கிறது.

Similar News