செய்திகள்

மாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் டீசர்

Published On 2018-08-11 16:29 IST   |   Update On 2018-08-11 16:29:00 IST
மாருதி சுசுகி விரைவில் 2018 சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட இருக்கும் நிலையில், புதிய காரின் டீசரை வெளியிட்டிருக்கிறது. #maruti #automobile


இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் செடான் மாடலாக இருக்கும் சியாஸ் 2018 ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய டீசர் படங்களில் மேம்படுத்தப்பட்ட எல்.இ.டி. டெயில் லைட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. புதிய எல்.இ.டி. லைட் தற்சமயம் சந்தைக்கு ஏற்ற வகையில் அழகாக காட்சியளிக்கிறது.

வடிவமைப்பை பொருத்த வரை சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் மேம்படுத்தப்பட்ட கிரில், மேம்படுத்தப்பட்ட எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லைட்கள், எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பம்ப்பர் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட மாடல் அதிக பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



பக்கவாட்டில் அதிகப்படியான மாற்றங்கள் இன்றி புதிதாய் மெஷின்டு அலாய் வீல்கள் வழங்கப்படலாம். பின்புறம் புதிய டெயில் லைட் கிளஸ்டர் மட்டும் வழங்கப்பட்டு, மற்றபடி எவ்வித மாற்றங்களும் இருக்காது என்றே தெரிகிறது. புதிய சியாஸ் மாடலின் மிகமுக்கிய மாற்றமாக அதன் இன்ஜின் இருக்கும்.

அந்த வகையில் புதிய சியாஸ் மாடலில் புத்தம் புதிய 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 103 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த இன்ஜின் SHVS மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #maruti  #automobile
Tags:    

Similar News