செய்திகள்
ஹூன்டாய் கோனா ஐயன் மேன் எடிஷன் அறிமுகம்
அமெரிக்காவில் நடைபெற்று வரும் சான் டீகோ காமிக்கான் திருவிழாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் கோணா ஐயன் மேன் எடிஷன் அறிமுகம் செயய்ப்பட்டு இருக்கிறது. #KonaIronManEdition
உலகளவில் காமிக் புத்தகம் சார்ந்த சூப்பர் ஹீரோக்களில் மிகவும் பிரபலமான கதாபாத்திரமாக ஐயன் மேன் இருக்கிறது. இதனை சரியாக புரிந்து கொண்ட ஹூன்டாய் அமெரிக்காவில் நடைபெறும் காமிக்கான் திருவிழாவில் ஐயன் எடிஷன் கோணா காரினை அறிமுகம் செய்துள்ளது.
ஹூன்டாய் கோணா ஐயன் மேன் எடிஷன் உற்பத்தி டிசம்பர் 2018-இல் துவங்கி 2019-ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரவிருக்கிறது. 2019 ஹூன்டாய் கோணா ஐயன் எடிஷனின் முன்பக்கம் கஸ்டம் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்க ஐயன் மேன் சூட் ஃபேஸ்மாஸ்க் (முகமூடி) போன்றே காட்சியளிக்கிறது. கோணாவின் வடிவமைப்பில் ஐயன் மேன் சூட் மிக முக்கிய அங்கம் வகித்திருக்கிறது.
இதுதவிர காரின் ரூஃப் ஐயன் மேன் மாஸ்க் மோடிஃப் போன்றும், V வடிவம் கொண்ட ஹூட் கார்னிஷ், பொனெட்டில் ஐயன் மேன் மற்றும், டீக்கல்களில் ஸ்டார்க் இன்டஸ்ட்ரீஸ் என பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது. கஸ்டம் 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் அதன் சென்டர் கேப் ஐயன் மேன் மாஸ்க் கொண்டிருக்கிறது. இதன் வெளிப்புற நிறம் டூயல்-டோன் ஐயன் மேன் ரெட் மற்றும் மேட் கிரே ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.
இதன் உள்புறம் ஐயன் மேன் சிக்னேச்சர் ஐயன் மேன் கியர்நாப், பிரத்யேக ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, சென்டர் கன்சோலில் ஐயன் மேன் கிராஃபிக்ஸ் மற்றும் கஸ்டம் சீட் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
மார்வெல் நிறுவனத்துடன் இணைந்திருப்பதன் மூலம் மக்கள் விருப்பத்துடன் அதிகம் பயன்படுத்தும் விஷயத்தில் பங்கேற்று இருப்பது சிறப்பான அனுபவமாக இருக்கிறது என ஹூன்டாய் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவர் மின்சூ கிம் தெரிவித்திருக்கிறார். #hyundaikona #KonaIronManEdition