இந்தியா
தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு ரூ.9½ கோடி கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
- பச்சை நிறத்தில் 20 பாக்கெட்டுகளில் மர்ம இலை பறிமுதல் செய்யப்பட்டது.
- பணத்துக்காக ஆசைப்பட்டு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை:
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த கவால்ஜித் சிங் (வயது31) என்ற பயணியின் டிராலி பையில் சோதனை நடத்திய போது, பச்சை நிறத்தில் 20 பாக்கெட்டுகளில் மர்ம இலை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அது வீரியம் மிக்க கஞ்சா என்பது தெரியவந்தது.
மேலும் அதன் மதிப்பு ரூ.9 கோடியே 53 லட்சம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் போதை பொருளை கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையின் போது அவர் கமிஷன் பணத்துக்காக ஆசைப்பட்டு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.