இந்தியா
வீட்டின் படுக்கையறையில் பூந்தொட்டிகளில் கஞ்சா செடிகளை வளர்த்த வாலிபர் கைது
- கலால் வட்ட ஆய்வாளர் அனில்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
- கஞ்சா செடிகள் மற்றும் அந்த அறையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி மருதூர் குளங்கரை செருகோல் பகுதியை சேர்ந்தவர் முகமது முஹ்சின்(வயது32). போதைபொருள் வழக்கில் தொடர்புடைய இவரின் வீட்டில் கருநாகப்பள்ளி கலால் வட்ட ஆய்வாளர் அனில்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த படுக்கை அறையில் 21 பூந்தொட்டிகளில் வித்தியாசமான செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. அது என்ன செடி என்று ஆய்வு செய்தபோது கஞ்சா செடிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அலங்கார செடிகளை போன்று படுக்கை அறையில் கஞ்சா செடிகளை வளர்த்துள்ளனர்.
இதையடுத்து பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் அந்த அறையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக முகமது முஹ்சினை கலால் துறையினர் கைது செய்தார்கள்.