இந்தியா

இன்ஸ்டாகிராம் நேரலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள்

Published On 2025-01-03 15:59 IST   |   Update On 2025-01-03 17:20:00 IST
  • அவரது நேரலையை சுமார் 20க்கும் அதிகமானோர் பேர் வரை பார்த்துக்கொண்டிருந்தனர்.
  • சிலர் அவர் இருந்த இடத்துக்கு நேரில் விரைந்தனர்

சத்தீஸ்கரில் இன்ஸ்டாகிராம் லைவ் நேரலையில் 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கரில் உள்ள ஜான்ஜ்கிரில் 19 வயது பெண் அங்கூர் கடந்த டிசம்பர் 29 அன்று, இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருந்தார்.

அவரது நேரலையை சுமார் 20க்கும் அதிகமானோர் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கூர் நேரலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

 

நேரலையை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவரது செல்போனுக்கு போன் அவரை செய்து தடுக்க முயன்றனர். சிலர் அவர் இருந்த இடத்துக்கு நேரில் விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அங்கூர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார்.

போலீஸ் விசாரணையில் அங்கூர் சத்தீஸ்கரில் உள்ள மிஸ்தா கிராமத்தில் வசிப்பவர் என்றும், அவரது பெற்றோர் ஐதராபாத்தில் தினசரி கூலித் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள் என்றும் தெரிய வந்தது.

முதற்கட்ட விசாரணையில் அவர் காதலில் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அங்கூர் தனது மொபைல் போனில் நீண்ட நேரம் செலவிடுவார் என்று அவரது கிராம மக்கள் சுட்டிக்காட்டினர். அங்கூரின் செல்போனை சைபர் செல் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். 

தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.

Tags:    

Similar News