இந்தியா

எங்களால்தான் உங்களுக்கு உடைகள், காலணிகள், மொபைல்கள்: சர்ச்சையான பாஜக எம்எல்ஏ-வின் பேச்சு

Published On 2025-06-26 18:20 IST   |   Update On 2025-06-26 18:20:00 IST
  • இங்கே உள்ள சிலர், குறிப்பாக இளைஞர்கள் எங்களை, எங்களது கட்சியை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர்.
  • விமர்சிப்பவர்களின் தாய்மார்களுக்கு சம்பளம் வளங்குகிறோம். மேலும், அவர்களுடைய தந்தையர்களுக்கு பென்சன் வழங்குகிறோம்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள பர்துர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பாபன்ராவ் லோனிகர். இவர் எங்களால்தான் உங்களுக்கு உடைகள், அணிகள், மொபைல்கள் உள்ளன எனப் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

பாபன்ராவ் லோனிகர் பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பாபன்ராவ் லோனிகர் பேசியிருப்பதாவது:-

இங்கே உள்ள சிலர், குறிப்பாக இளைஞர்கள் எங்களை, எங்களது கட்சியை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர். நாங்கள் அவர்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டிகள், கான்கிரீட் சாலைகள், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மண்டபங்கள் கொடுத்துள்ளோம். உங்கள் கிராமத்திற்கு பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மூலம் நன்மைகளை கிடைத்துள்ளன.

விமர்சிப்பவர்களின் தாய்மார்களுக்கு சம்பளம் வளங்குகிறோம். மேலும், அவர்களுடைய தந்தையர்களுக்கு பென்சன் வழங்குகிறோம். பிரதமர் மோடி கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். லட்கி பெஹின் திட்டத்தின் மூலம் உங்களுடைய சகோதரிகள் பலன் பெறுகிறார்கள். உங்களிடம் (பாஜக விமர்சகர்கள்) இருக்கும் உடைகள், காலணிகள், மொபைல் போன்கள் எங்களால்தான்.

இவ்வாறு அந்த வீடியோவில் கேட்க முடிகிறது.

இதற்கு மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News