இந்தியா

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது மூலம் ஜனநாயகத்தின் படுகொலையை உலகம் கண்டுள்ளது- உத்தவ் தாக்கரே..!

Published On 2025-08-11 17:48 IST   |   Update On 2025-08-11 17:48:00 IST
  • பீகார் மாநில வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.
  • டெல்லியில் இன்று எம்.பி.க்கள் பேரணி மேற்கொண்டபோது, தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. முக்கியமாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, தன்னிடம் ஆதாரம் இருப்பதாக தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் பீகார் மாநில SIR-ஐ கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் நோக்கி பேரணி சென்றனர். பேரணியின்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், பேரணியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், உலகம் ஜனநாயகத்தின் படுகொலையை கண்டுள்ளது உன சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தில் அரசு ஏன் தலையீடு செய்கிறது என்பதற்கு, இது தற்போதைய சாட்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News