அகமதாபாத் விமான விபத்தில் தம்பி உயிரிழப்பு - துக்கம் தாங்காமல் அக்கா மாரடைப்பால் மரணம்
- குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர்.
- 135 உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 101 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 270 ஆக உயர்ந்துள்ளது.
அகமதாபாத் விமான விபத்தில் 57 வயதான போகிலால் மற்றும் அவரது மனைவி 55 வயதான ஹன்சா ஆகியோர் உயிரிழந்தனர்.
தனது தம்பி போகிலால் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது அக்கா (65) கோமதி மாரடைப்பால் உயிரிழந்தார். .
இதில் துக்கம் என்னவென்றால் போகிலால் உடல் இன்னும் அடையாளமா காணப்படாததால் அவருக்கு இன்னும் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட நிலையில், கோமதியின் இறுதிச் சடங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.