உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை சுட்டு பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
- அதிர்ச்சியடைந்த பெற்றோர் லக்னோ போலீசில் புகார் செய்தனர்.
- கமல் கிஷோர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் கமல் கிஷோர். இவர் சம்பவத்தன்று அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை புதருக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை காணவில்லை என பெற்றோர் தேடிய போது சிறுமி ரத்தக்காயத்துடன் வீட்டுக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் லக்னோ போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சகினா கான் விசாரணை நடத்திய போது கமல் கிஷோர் மதேகஞ்ச் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை பிடிக்க விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்ற கமல் கிஷோரை சப்-இன்ஸ்பெக்டர் சகினா கான் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார்.
பின்னர் கமல் கிஷோரை கைது செய்த போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கமல் கிஷோர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.