முதல்-மந்திரியை விமர்சிப்பவர்களை விடமாட்டோம்- சந்திரசேகர ராவின் நாக்கை அறுப்போம்: ஜக்கா ரெட்டி
- தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
- ஒரு பொது பிரச்சனையும் இருந்தால் அவர்கள் அந்த விஷயத்தை அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.
தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ஜக்கா ரெட்டி ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றனர். எந்த ஒரு பொது பிரச்சனையும் இருந்தால் அவர்கள் அந்த விஷயத்தை அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.
அதனை மீறி தெலுங்கானா முதல் மந்திரியை விமர்சித்தால் காங்கிரஸ் கட்சியினர் அவர்களை பிடித்து நாக்கை அறுப்பார்கள்.
அது பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே. டி.ராமராவ் அல்லது அவருடைய தந்தை முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவாக இருந்தாலும் அவர்களின் நாக்கும் அறுந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூத்த காங்கிரஸ் தலைவரின் இந்த மிரட்டல் பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்படுகின்றன.இதற்கு பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு போட்டியாக ரேவேந்த்ரெட்டியின் பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.