இந்தியா

வெனிசுலாவைப்போல் "நாளை மோடியை கூட ட்ரம்ப் கடத்திட்டா?" - காங்கிரஸ் தலைவர் பிரித்விராஜ் சவான்

Published On 2026-01-06 18:39 IST   |   Update On 2026-01-06 18:39:00 IST
  • அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மூலம் நமது நாட்டு மக்கள் ஈட்டி வந்த லாபம் இனி கிடைக்காது.
  • காங்கிரஸ் தனது இந்திய-எதிர்ப்பு மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் வெனிசுலா அதிபர் மதுரோவின் கைது குறித்து தெரிவித்த கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், 

50 சதவீத வரியுடன் வர்த்தகம் செய்வது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. நடைமுறையில், இது இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை, குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செய்யப்படும் ஏற்றுமதியைத் தடுப்பதற்குச் சமமாகும். முன்பு அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மூலம் நமது நாட்டு மக்கள் ஈட்டி வந்த லாபம் இனி கிடைக்காது. நாம் மாற்றுச் சந்தைகளைத் தேட வேண்டியிருக்கும், அதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன." என தெரிவித்தார்.


பிரித்விராஜ் சவான்

தொடர்ந்து மதுரோ கைது குறித்து பேசிய அவர், 

"அப்படியானால் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. வெனிசுலாவில் நடந்தது போன்ற ஒன்று இந்தியாவில் நடக்குமா? திரு. ட்ரம்ப் நமது பிரதமரைக் கடத்திச் செல்வாரா?" என தெரிவித்தார். 

இவரின் இந்த கருத்துகள் விமர்சனங்களையும், கேலி, கிண்டல்களையும் பெற்றுவருகிறது. சமூக வலைதளத்தில் இவரின் இந்த கருத்துகளை பலரும் நகைச்சுவை செய்தாலும், பாஜகவினர் இந்த கருத்துக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

"காங்கிரஸ் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கீழ்த்தரமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான் இந்தியாவின் நிலையை வெனிசுலாவுடன் வெட்கமின்றி ஒப்பிடுகிறார். 'வெனிசுலாவில் நடந்தது இந்தியாவில் நடக்குமா?' என்று கேட்பதன் மூலம், காங்கிரஸ் தனது இந்திய-எதிர்ப்பு மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது. ராகுல் காந்தி பாரதத்தில் குழப்பத்தை விரும்புகிறார். ராகுல் காந்தி பாரதத்தின் விவகாரங்களில் வெளிநாட்டினரின் தலையீட்டை நாடுகிறார்!" என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News