இந்தியா

ஆண் குழந்தை வேணும்.. தூக்கில் தொங்கிய மனைவி.. தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது

Published On 2025-04-05 16:34 IST   |   Update On 2025-04-05 16:34:00 IST
  • தர்ஷனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
  • கணவர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஆண் குழந்தை பிறக்காததற்காக தனது 25 வயது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ் நகரில் வசிப்பவர் 33 வயதான விஷால் கவாய். இவர் தர்ஷனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் தனது மனைவியின் பெற்றோரிடம் இருந்து விஷால் கவாய் தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளார்.

இதற்கிடையே தர்ஷனாவுக்கு இரண்டு மகள்கள் பிறந்த பிறகு அவரது துன்புறுத்தல் மோசமடைந்தது. ஆண் குழந்தையை பெற்றெடுக்காததற்காக விஷால் தர்ஷனாவை மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

இதனால் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வீட்டின் கூரையில் தர்ஷனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பாரதீய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 108 (தற்கொலைக்குத் தூண்டுதல்), 80 (வரதட்சணை மரணம்), 115(2) (காயப்படுத்துதல்) மற்றும் 352 (வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் கணவர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர்.    

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

Tags:    

Similar News