VIDEO: இந்தியா-பாக். போரை நிறுத்தியதாக 51-ஆவது முறையாக பேசிய டிரம்ப்.. மோடியை விமர்சித்த காங்கிரஸ்
- 200 சதவீதம் வரிவிதிப்பதாக மிரட்டி இந்தியா - பாகிஸ்தான் சண்டையை தானே நிறுத்தியதாக பேசியிருந்தார்.
- டிரம்ப் தான் விடுத்ததாகக் கூறப்படும் வரி அச்சுறுத்தல்கள் குறித்து குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளார்.
எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்காவில் இருந்து கிளம்பிய டிரம்ப் முன்னதாக இஸ்ரேல் சென்றார்.
எகிப்துக்கு புறப்படும் முன் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், 200 சதவீதம் வரிவிதிப்பதாக மிரட்டி 24 மணி நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் சண்டையை தானே நிறுத்தியதாக பேசியிருந்தார்.
இதற்கிடையே இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்புக்கு டிரம்ப்-ஐ பாராட்டி பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டிரம்ப் பேசிய வீடியோவை பகிர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த முறை இந்தியாவை ஆபரேஷன் சிந்தூரை திடீரென நிறுத்த கட்டாயப்படுத்த வரிகளைப் பயன்படுத்தியதாக டிரம்ப் கூறுவது 51வது முறையாகும். டிரம்ப் தான் விடுத்ததாகக் கூறப்படும் வரி அச்சுறுத்தல்கள் குறித்து குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளார்.
காசா தொடர்பாக அவர் மேற்கொண்ட அமைதி முயற்சிகளைப் பாராட்டும்போது நமது பிரதமர் அதேவேளையில் இதுகுறித்து தொடர்ந்து அமைதியாக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.