இந்தியா

VIDEO: ஐதராபாத்தின் பழம்பெரும் 'கராச்சி' பேக்கரியை அடித்து நொறுக்கிய பாஜக ஆதரவாளர்கள்

Published On 2025-05-12 00:18 IST   |   Update On 2025-05-12 00:19:00 IST
  • கராச்சி பேக்கரி 1953 ஆம் ஆண்டு முதல் ஐதராபாத்தில் செயல்பட்டு வருகிறது.
  • போலீசார் குவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களால் தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முடியவில்லை.

இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் சூழலில் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள கராச்சி பேக்கரி மீது பாஜக ஆதரவாளர்கள்  சூறையாடினர்.

இன்று பிற்பகலில் காவி கொடிகளை ஏந்தி வந்த அந்த கும்பல், "பாகிஸ்தான் முர்தாபாத்" மற்றும் "பாரத் மாதா கீ ஜெய்" போன்ற கோஷங்களை எழுப்பி அங்கு வன்முறையில் ஈடுபட்டது.

பேக்கரியின் பெயரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பேக்கரியின் அறிவிப்புப் பலகைகளை அடித்து நொறுக்கி உடைத்து சூறையாடலில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களால் தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முடியவில்லை. பின்னர், நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறை அதிகாரிகள் வந்தனர்.

பேக்கரி உரிமையாளர்கள் தங்கள் பிராண்ட் ஐதராபாத்தில் தோன்றியதாகவும், கராச்சி என்ற பெயர் அதன் வரலாற்றின் ஒரு பகுதி என்றும் இந்த விவகாரத்துக்கு பதிலளித்தனர். புகழ்பெற்ற கராச்சி பேக்கரி 1953 ஆம் ஆண்டு முதல் ஐதராபாத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News