இந்தியா

இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு.. ஐந்து ஆண்டுகளுக்கு அம்பானி கையில்..

Published On 2023-08-31 17:01 IST   |   Update On 2023-08-31 17:01:00 IST
  • இந்திய கிரிக்கெட் அணி உள்ளூர் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் ஏலம் விடப்பட்டது.
  • ஐந்து ஆண்டுகளுக்கு போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை முகேஷ் அம்பானியின் நிறுவனம் கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் நடைபெற்று இருக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளூர் போட்டிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான டி.வி. மற்றும் டிஜிட்டல் உரிமத்தை முகேஷ் அம்பானியின் வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அதன்படி பி.சி.சி.ஐ. சார்பில் உள்நாட்டில் நடத்தப்படும் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமைத்தை வியாகாம் 18 நிறுவனம் ரூ. 5 ஆயிரத்து 963 கோடிகளை கொடுத்து கைப்பற்றி இருக்கிறது.

இதில் ரூ. 3 ஆயிரத்து 101 கோடி டிஜிட்டல் உரிமத்திற்கு செலுத்துகிறது. அந்த வகையில் டிஜிட்டலில் ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கான தொகை ரூ. 35 கோடியே 23 லட்சம் ஆகும். டி.வி.-யில் ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கான தொகை ரூ. 32 கோடியே 52 லட்சம் ஆகும்.

Tags:    

Similar News