இந்தியா
என்னைப் பார்த்து கண்ணடிக்கும் பெண் வக்கீல்களுக்கு சாதகமாக தீர்ப்பு.. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சர்ச்சை
- உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
- எனது பதிவை தீவிரமாக எடுத்துக்கொண்ட பெண் வழக்கறிஞர்கள் அவர்களின் மனம் புண்பட்டதாக கூறினர்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்றவர் மார்க்கண்டே கட்ஜு. இவர் அண்மையில் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலானது.
அதாவது, நீதிபதி பணியில் இருந்தபோது தன்னை பார்த்து கண்ணடித்த பெண் வழக்கறிஞர்களுக்கு சாதகமான தீர்ப்புகளை தந்ததாக பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு சர்ச்சையாகி பலரும் குறிப்பாக உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில் தனது பதிவுக்கு கட்ஜு மன்னிப்பு கோரியுள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதவில், "நகைச்சுவையாக மட்டுமே சமூக தளத்தில் அதை பதிவிட்டேன்; உடனே அதை நீக்கியும் விட்டேன்.
எனது பதிவை தீவிரமாக எடுத்துக்கொண்ட பெண் வழக்கறிஞர்கள் அவர்களின் மனம் புண்பட்டதாக கூறினர். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.