இந்தியா

மகா கும்பமேளாவில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் : திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அமைச்சர்கள்

Published On 2025-01-22 14:34 IST   |   Update On 2025-01-22 14:34:00 IST
  • மகா சிவராத்திரி நாளான அடுத்த மாதம் 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
  • கூட்டத்தில் கும்பமேளா ஏற்பாடுகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் கடந்த 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான அடுத்த மாதம் 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 35 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர்.



இந்த நிலையில், வரும் மகா கும்பமேளாவையொட்டி, அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கும்பமேளா ஏற்பாடுகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு முதல்-மந்திரியுடன் அனைத்து அமைச்சர்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.







Tags:    

Similar News